உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வீரர்களின் பாதுகாப்பு கருதி சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் பல்வேறு தொடர்களை ஒத்தி வைத்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் நடந்த ஆசிய - ஒசேனியா மண்டலங்களுக்கு உட்பட்ட நாடுகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. அதில் பாகிஸ்தானை வீழ்த்திய பின், 2020ஆம் ஆண்டுக்கான உலகத் தகுதிச் சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியது.
அதில், குரோஷிய அணியை எதிர்த்த இந்திய, 3-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் உலகப் பிரிவு 1 ஆட்டத்தில் இந்திய அணி பங்கேற்கவிருந்தது. உலகத் தகுதிச் சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்த அணிகளான இந்தியா - ஃபின்லாந்து அணிகள் செப்டம்பர் மாதத்தில் நடக்கவிருந்த உலகப் பிரிவு ஆட்டத்தில் மோதவிருந்தன.