அமெரிக்காவில் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. அதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் சுவிஸ் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் ஆஸ்ட்ரிய வீரர் டொமினிக் தீம் மோதினர்.
இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் அதிரடியாக ரோஜர் ஃபெடரர், டொமினிக் தீமை திக்கு முக்காட வைத்து எளிதாக 3-6 என முதல் செட்டை கைப்பற்றினார்.
பின்னர் சுதாரித்துக் கொண்ட தீம், தனது திறமையான ஆட்டத்தால் இரண்டாவது செட்டை 6-3 என கைப்பற்ற ஆட்டம் பரபரப்பானது.
மூன்றாம் செட் ஆட்டம் தொடக்கத்திலிருந்து ஃபெடரர் அசத்தலாக ஆட, தீம் தனது திறமையை வெளிப்படுத்தி ஈடுகொடுத்து ஆடினார். ஒரு கட்டத்தில் 5-5 என சமமாக இருக்க, பின்னர் அதிரடி காட்டிய தீம் 7-5 என ஃபெடரரை வீழ்த்தி இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் தொடரின் பட்டத்தைக் கைப்பற்றி சாதனைப் படைத்தார்.