இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க நட்சத்திர வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸை எதிர்த்து ஜெர்மன் வீராங்கனை கெர்பர் ஆடினார். இந்த போட்டியின் முதல் செட்டை அதிரடியாக ஆடிய கெர்பர் 7-6 என கைப்பற்றினார். இந்த முதல் செட் ஆட்டம் 58 நிமிடங்கள்வரை நீடித்தது.
வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த கெர்பர்! - indian wells masters tennis
கலிஃபோர்னியா : இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டியில் அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி ஜெர்மன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.
அரையிறுதிக்குள் நுழைந்த கெர்பர்
பின்னர் தொடங்கிய இரண்டாம் செட்டில், தொடர்ந்து சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்திய கெர்பர், வீனஸ் வில்லியம்ஸை 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.
இந்த தொடரோடு சேர்த்து இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் தொடரில் மூன்றாவது முறையாக அரையிறுதி போட்டிக்கு கெர்பர் தகுதி பெற்றுள்ளார்.