ஆடவருக்கான ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் தொடர் சீனாவின் ஆன்னிங் நகரில் நடைபெற்று வருகிறது. இதில்,நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீரர் பிரேஷ்னேஷ் குணேஸ்வரன், செர்பியாவின் மிலோசெவிச்சை எதிர்கொண்டார்.
டென்னிஸ்: அரையிறுதியில் பிரேஜ்னேஷ் குணேஸ்வரன்! - பிரேஜ்னேஷ் குணேஸ்வரன்
சீனாவில் நடைபெற்று வரும் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் பிரேஜ்னேஷ் குணேஸ்வரன் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் போராடி வென்ற குணேஸ்வரன், இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கில் லாவகமாக கைப்பற்றினார். இதன் மூலம், 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல் நடைபெற்ற மற்றொரு காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் 1-6, 6-7 என்ற நேர் செட் கணக்கில் போலாந்தின் கமில் மஜ்சராக்கிடம் தோல்வியுற்றார்.இதைத்தொடர்ந்து இன்று நடைபெறவிருக்கும் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் பிரேஷ் குணேஸ்வரன், போலாந்தின் கமில் மஜ்சராக்கை (Kamil Majchrzak) சந்திக்கவுள்ளார்.