தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

6 டாலர் தான் இருந்தது; கோலி இல்லை என்றால்? மனம் திறக்கும் சுமித் நகல் - Kohli help to Sumit Nagal

தன்னிடம் ஆறு டாலர் இருந்தபோது கோலிதான் உதவி செய்ததாக இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நகல் மனம் திறந்துள்ளார்.

Nagal on Virat kohli

By

Published : Sep 2, 2019, 11:21 PM IST

சமீப நாட்களாக இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நகல்தான் சமூகவலைதளங்களில் ஆக்கிரமித்து வந்தார். நியூயார்க்கில் நடைபெற்றுவரும் யு.எஸ். ஓப்பன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அவர் சுவிட்சர்லாந்தின் ஜாம்பவான் ஃபெடரரை எதிர்த்து விளையாடியதே இதற்கு முக்கிய காரணம். இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

சுமித் நகல் - ஃபெடரர்

இதைத்தொடர்ந்து சுமித் நகல், ஃபெடரருக்கு கடும் போட்டியைத் தந்தார். இதனால், முதல் செட்டை அவர் 6-4 என கைப்பற்றி அசத்தினார். பின்னர், 1-6, 2-6, 4-6 என்ற கணக்கில் ஃபெடரரிடம் தோல்வி அடைந்தார். போட்டி முடிந்த பின், சுமித் நகல் நன்கு விளையாடுவதாகவும் அவர் எதிர்காலத்தில் சிறந்த வீரராக வலம்வருவார் என்றும் ஃபெடரர் கூறினார். இந்நிலையில், 25 வயதான சுமித் நகலுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி தான் நிதியுதவி அளித்து வருகிறார்.

சுமித் நகல்

இது குறித்து சுமித் நகல் கூறுகையில்,"நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக எதிர்பார்த்த அளவில் விளையாடவில்லை. இதனால், கடும் நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டிருந்தேன். அப்போது விராட் கோலியின் அறக்கட்டளைதான் 2017இல் இருந்து எனக்கு உதவி செய்துவருகிறது. விராட் கோலி இல்லை என்றால் நான் என்ன ஆகியிருப்பேன் என்றே தெரியவில்லை.

இந்த ஆண்டு தொடக்கத்தில் கனடாவில் டென்னிஸ் தொடரில் விளையாடிய பிறகு ஜெர்மனிக்கு புறப்பட்டபோது என் வாலெட்டில் ஆறு டாலர்தான் இருந்தது. கோலியிடம் இருந்து நிதியுதவி கிடைத்தபோதே என்னிடம் ஆறு டாலர்தான் இருந்தது என்றால் அதற்கு முன் எனது நிலைமை எப்படி இருந்திருக்கும் என யோசித்துப் பாருங்கள். மக்கள் தடகள வீரர்களுக்கு நிதியுதவி அளித்தால், நிச்சயம் பல்வேறு விளையாட்டுகள் நம் நாட்டில் முன்னேற்றம் அடையும். தற்போது எனது நிலைமை மாறியுள்ளது. கோலியிடம் இருந்து இந்த உதவி எனக்கு கிடைத்ததை அதிர்ஷ்டமாகதான் நினைக்கிறேன்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details