இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சா - பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் தம்பதிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது அதிக எடையுடன் தோற்றமளித்த சானியா அதன் பிறகு சில மாதங்களில் உடல் எடையைக் குறைத்து, மீண்டும் ஃபிட்டாக இருந்தார். இதுமட்டுமின்றி தான் மீண்டும் டென்னிஸ் களத்துக்கு திரும்பப்போகிறேன் எனவும் அவர் பதிவிட்டிருந்தார்.
அவர் உடல் எடையை எப்படி குறைத்தார் என்பது பல்வேறு தரப்பினருக்கும் புரியாமல் இருந்தது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சானியா முர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
அந்த பதவில் அவர், "பலரும் என்னிடம் எப்படி நீங்கள் உங்களது எடையக் குறைத்தீர்கள் என கேட்டுவந்தனர். அதற்காக, தான் எப்படிப்பட்ட பயிற்சியில் ஈடுபட்டேன் என்பதை நான் தினமும் ஒவ்வொரு பதிவில் உங்களுக்கு சொல்கிறேன்.நான் கருவுற்ற போது 23 கிலோ எடை கூடினேன். பிரசவம் முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு நான் ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உடல் எடையைக் குறைக்கத் தொடங்கினேன். அதனால்தான், நான் நான்கு மாதத்தில் 26 கிலோ எடையைக் குறைத்தேன்.
பொதுவாக, பிரசவம் முடிந்தப் பிறகு பெண்கள் உடல் எடையைக் குறைப்பது மிகவும் சிரமம் என பலர் கருதுகிறார்கள். ஆனால், அப்படி இல்லை பெண்களே.. என்னால் இதை செய்ய முடிந்தப் போது ஏன் உங்களால் முடியாது. தினமும் ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். அது உங்களது உடல்வலிமையை மட்டுமின்றி மனவலிமையையும் திடப்படுத்தும்" என பதிவிட்டார்.
அவரது இன்ஸ்டாகிராம் பதிவை கிட்டத்தட்ட இரண்டு லட்ச்த்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். உடல் எடையைக் குறைக்க சானியா டிப்ஸ் தரும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.