தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

20ஆவது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய ஹெலப்! - மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில்

துபாய்: துபாய் ஓபன் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், ரோமானியாவின் சிமோனா ஹெலப் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

Halep battles past Rybakina in Dubai for 20th career title
Halep battles past Rybakina in Dubai for 20th career title

By

Published : Feb 23, 2020, 6:41 PM IST

துபாயில் நடைபெற்றுவரும் துபாய் ஓபன் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் ரோமானியாவின் சிமோனா ஹெலப், ரஷ்யாவின் எலெனா ரிபாகினாவை(Elena Rybakina) எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிபாகினா முதலாவது செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி ஹெலப்பிற்கு அதிர்ச்சியளித்தார். பின் சுதாரித்துக் கொண்ட ஹெலப், இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி ஆட்டத்தை சமன் செய்தார்.

இதனையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டுக்கான ஆட்டத்தில் அபாரமாக விளையாடியா ஹெலப், 7-6 என்ற கணக்கில் வெற்றிபெற்றார். இதன் மூலம் ரோமானியாவின் சிமோனா ஹெலப், 3-6, 6-3, 7-6 என்ற புள்ளிகள் அடிப்படையில் எலெனோ ரிபாகினாவை வீழ்த்தி, துபாய் ஓபன் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார்.

சிமோனா ஹெலப் - எலெனா ரிபாகினா

மேலும் சிமோனா ஹெலப், சர்வதேச டென்னிஸ் தொடரில் தனது 20ஆவது சாம்பியன்ஷிப் பட்டத்தையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஸ்பெயின் மாஸ்டர்ஸ்: அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீரர்!

ABOUT THE AUTHOR

...view details