தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

முதல்முறையாக ஆஸ்திரேலியன் ஓபன் ஃபைனலில் முகுருசா - Simona Halep

மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டிக்குள் கார்பைன் முகுருசா நுழைந்தார்.

garbine-muguruza-defeats-simona-halep-in-semi-finals-to-enter-in-ao-finals
garbine-muguruza-defeats-simona-halep-in-semi-finals-to-enter-in-ao-finals

By

Published : Jan 30, 2020, 2:04 PM IST

ஒவ்வொரு நாளும் ஆஸ்திரேலியன் ஓபன் தொடர் ரசிகர்களுக்கு ஆச்சரியமளித்துவருகிறது. இன்றைய நாளின் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டியை, சோஃபியா கெனின் வீழ்த்தி ஆஸ்திரேலியன் ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேற, இரண்டாவது அரையிறுதியில் சிமோனா ஹெலப் - கார்பைன் முகுருசா ஆடினர்.

முதல் செட் ஆட்டம் தொடக்கத்திலிருந்தே வீராங்கனைகளுக்கிடையே இருந்த பதற்றம் ரசிகர்களுக்கும் தொற்றிக்கொண்டது. இதில் இரு வீராங்கனைகளும் போட்டிப்போட்டி சரிக்குச்சமமாக ஆடி 5-5 என்ற நிலைக்கு வந்தனர். இதையடுத்து மீண்டும் இரு வீராங்கனைகளும் ஒவ்வொரு புள்ளிகளைப் பெற ஆட்டம் 6-6 என மாறியது. இதனால் டை ப்ரேக்கருக்கு சென்ற ஆட்டத்தில் 10-8 என்று வெற்றிபெற்று முதல் செட்டை 7-6 (10-8) என கார்பைன் முகுருசா கைப்பற்றினார்.

கார்பைன் முகுருசா

இதையடுத்து இரண்டாவது செட் ஆட்டத்தில் தொடக்கத்தில் சிமோனா சாதுர்யமாக முதலிரண்டு புள்ளிகளைப் பெற, பின்னர் சுதாரித்துக்கொண்ட முகுருசா 2-2 என சமன் செய்தார். இதையடுத்து ஆட்டம் மீண்டும் 5-5 என்ற நிலைக்குச் சென்றது. இதையடுத்து இந்த செட் ஆட்டமும் டை ப்ரேக்கர் வரை செல்லுமா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது.

சிமோனா ஹெலப்

ஆனால் இதற்கு விடையளிக்கும் விதமாக சிறப்பாக ஆடிய முகுருசா 7-5 என இரண்டாவது செட்டைக் கைப்பற்றி ஆஸ்திரேலியன் ஓபன் இறுதிச்சுற்றுக்கு முதல்முறையாக முன்னேறினார்.

இதையடுத்து முகுருசா பேசுகையில், ''இந்த ஆட்டத்தில் சிமோனாவுடன் மோதவேண்டும் என்ற முடிவான போதே மனதளவில் தயாராகிக்கொண்டேன். நிச்சயம் சிமோனா எளிதாக தோற்கமாட்டார். எனவே கடுமையான போட்டியளிக்க வேண்டும் என்றுதான் ஆட்டத்தைத் தொடங்கினேன். ஒருபோதும் எனது கையை விட்டு ஆட்டம் சென்றுவிட்டது என நினைக்கவில்லை. இறுதிப் போட்டியில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. இன்னும் 48 மணி நேரம் இறுதிப்போட்டிக்கு இருப்பது தயாராவதற்கு உதவியாக இருக்கும்'' என்றார்.

இதையும் படிங்க: கோப் ப்ரைன்ட் மனைவி வனேஸா ப்ரைன்ட் ரசிகர்களுக்கு உருக்கமான கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details