டென்னிஸ் விளையாட்டின் மிகவும் பிரபலமான பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர், அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா, பிரிட்டனின் ஆண்டி முர்ரேவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இப்போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்த வாவ்ரிங்கா 6-1, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் முர்ரேவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.