பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் கிரீஸ் நாட்டின் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ் (Stefanos Tsitsipas), உலகின் நம்பர் ஒன் தரவரிசை வீரர் நோவக் ஜோகோவிக் (செர்பியன்) ஆகியோர் மோதினர்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜோகோவிச் 6-7 (6-8), 2-6, 6-3, 6-2, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றியை ருசித்தார்.
இதன்மூலம் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை இரு முறை வென்றவர் என்ற சாதனையையும் படைத்தார். அதுமட்டுமல்லாமல், நோவக் ஜோகோவிச் இதுவரை 19 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று ரோஜர் பெடரர், ரபேல் நடால் ஆகியோரை நெருங்கியுள்ளார்.
ரோஜரும், நடாலும் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளனர். மேலும், டென்னிஸ் ஓபன் (1968) சகாப்த வரலாற்றில் (கிட்டத்தட்ட 52 ஆண்டுகள்) இரு கிராண்ஸ்ட்லாம் வென்ற முதல் ஆடவர் நோவக் ஜோகோவிச் ஆவார். அதேபோல் ராட் லாவருக்கு ( Rod Laver) பிறகு நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் இருமுறை வென்றவர் என்ற சாதனையையும் படைத்தார்.