தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முகுருசாவை வீழ்த்திய ஸ்டீஃபன்ஸ்! - முகுருசா vs ஸ்டீஃபன்ஸ்

பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் நான்காவது சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை முகுருசாவை அமெரிக்க வீராங்கனை ஸ்டீஃபன்ஸ் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றார்.

முகுருசா

By

Published : Jun 3, 2019, 12:11 PM IST

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றுப் போட்டியில் நட்சத்திர வீராங்கனைகளான ஸ்பெயின் வீராங்கனை முகுருசாவை எதிர்த்து அமெரிக்காவின் ஸ்டீஃபன்ஸ் விளையாடினார்.

தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ஸ்டீஃபன்ஸுக்கு முன்னால் முகுருசா தொடர்ந்து சொதப்பி வந்தார். இந்நிலையில் முதல் செட்டை 6-4 என ஸ்டீஃபன்ஸ் கைப்பற்றினார்.

முகுருசா

பின்னர் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றிலும் ஸ்டீஃபன்ஸ் அதிரடியை தொடர்ந்தார். அதில் 6-3 என்ற செட் கணக்கில் இரண்டாவது செட்டை ஸ்டீஃபன்ஸ் கைப்பற்ற, காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ஜொகன்னா கொண்ட்டா

இதனையடுத்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், குரோஷிய வீராங்கனை டோன்னா வெகிக்கை (Donna vekic) எதிர்த்து இங்கிலாந்தின் ஜொகன்னா கொண்ட்டா (johanna konta) விளையாடினார். இதில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய கொண்ட்டா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

காலிறுதி சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஸ்டீஃபன்ஸை எதிர்த்து கொண்ட்டா ஆடவுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details