கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர், அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று (அக்.04) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காம் சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவை எதிர்த்து விளையாடினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் கைபற்றிய நடால், இரண்டாவது செட்டையும் 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி செபாஸ்டியனுக்கு அதிர்ச்சியளித்தார்.