இதுதொடர்பாக பிரான்ஸ் வானொலியில் பேசிய அமைச்சர், " கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், அனைத்து விளையாட்டு மற்றும் முக்கிய நிகழ்வுகளின் தொடங்கும் தேதியை மாற்றியமைப்பது குறித்து பிரெஞ்சு டென்னிஸ் கூட்டமைப்புடன் பேசி வருகிறோம். புகழ்பெற்ற பிரெஞ்ச் ஓபன் தொடர், மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்தார். முன்னதாக 2020இல், கரோனா பரவல் காரணமாக பிரேஞ்ச் ஓபன் நான்கு மாதம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரெஞ்ச் ஓபன் 2021 டென்னிஸ் - ஒத்தி வைக்க வாய்ப்பு ? - கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்
பாரிஸ்: கரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்தி வைக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அமைச்சர் ரோக்சனா மரசினானு தெரிவித்துள்ளார்.
பிரெஞ்ச் ஓபன்
கரோனா பரவலை கட்டுப்படுத்த, பிரான்சில் தற்போது மூன்றாவது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் உயிரிழப்பு