தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பிரஞ்சு ஓபன்: சிமோனா ஹாலெப் அதிர்ச்சித் தோல்வி! - பிரஞ்சு ஓபன் காலிறுதிச்சுற்று

பிரஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு நான்காம் சுற்று ஆட்டத்தில் முன்னணி வீராங்கனை சிமோனா ஹாலெப் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

French Open: 19-year-old Iga Swiatek defeats Simona Halep
French Open: 19-year-old Iga Swiatek defeats Simona Halep

By

Published : Oct 4, 2020, 6:38 PM IST

டென்னிஸ் விளையாட்டின் மிகப் பிரபலமான தொடரான பிரஞ்சு ஓபன் தொடர், அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இத்தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு நான்காம் சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீராங்கனை ரொமேனியாவி சிமோனா ஹாலெப், 19 வயதேயான போலாந்தின் ஈகா ஸ்வியாடெக்கை எதிர்த்து விளையாடினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற நேர் செட்கணக்கில் ஹாலெப்பை வீழ்த்தி அதிர்ச்சியளித்தார்.

சிமோனா ஹாலெப் - ஈகா ஸ்வியாடெக்

இந்த வெற்றியின் மூலம் ஈகா ஸ்வியாடெக், பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார். மேலும் இப்போட்டியில் தோல்வியைத் தழுவிய ஹாலெப், தொடரிலிருந்து வெளியேறினார்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: யுஏஇ வந்தடைந்த பென் ஸ்டோக்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details