தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பிரெஞ்ச் ஓபன்: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் நடால்!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றுப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான நோவாக் ஜோகோவிச்சை வீழ்த்தி ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

For the 13th time Rafael Nadal  is King in Paris.
For the 13th time Rafael Nadal is King in Paris.

By

Published : Oct 11, 2020, 9:32 PM IST

Updated : Oct 12, 2020, 11:12 AM IST

பரபரப்பாக நடைபெற்றுவந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று (அக். 11) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டத்தில், உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், உலகின் முன்னணி வீரர் ஸ்பெயினின் ரஃபேல் நடாலை எதிர்கொண்டார்.

தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஃபேல் நடால் முதல் செட்டை 6-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சியளித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்திலும் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால், 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். பின்னர் நடைபெற்ற மூன்றாவது செட் ஆட்டத்திலும் அதிரடியை வெளிப்படுத்திய நடால் 7-5 என்ற கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தினார்.

இதன் மூலம் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 6-0, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் உலகின் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச்சை வீழ்த்தி பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் 13ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் ரஃபேல் நடால் பிரெஞ்ச் ஓபன் தொடரில் , தனது 100ஆவது வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் ரஃபேல் நடால் சர்வதேச டென்னிஸ் தொடரில் தனது 20ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி, டென்னிஸ் விளையாட்டில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற ரோஜர் ஃபெடரரின் (20) சாதனையையும் சமன் செய்தார்.

மேலும், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியதன் மூலம் ரஃபேல் நடாலுக்கு பரிசுத் தொகையாக 14 கோடி ரூபாயும்; இரண்டாவது இடத்தைப் பிடித்த ஜோகோவிச்சுக்கு ரூ.7 கோடி ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:பிரெஞ்ச் ஓபன்: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் ஸ்வியாடெக்!

Last Updated : Oct 12, 2020, 11:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details