ஜெர்மனி நகரில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஸ்விஸ்-ன் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரரை எதிர்த்து பெல்ஜியத்தின் டேவிட் கோஃபின் விளையாடினார்.
இந்த ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரின் தொடக்கம் முதலே பத்தாவது முறையாக தொடரைக் கைபற்றி ரோஜர் ஃபெடரர் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ரசிகர்களின் நம்பிக்கை வீண் போகாத வகையில், ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் பெல்ஜியம் வீரர் டேவிட் கோஃபின் முதல் செட்டில் விளையாடினர். இருப்பினும் 7-6 என்ற கணக்கில் முதல் செட்டை டை பிரேக்கர் முறையில் ரோஜர் ஃபெடரர் கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டின் ஆரம்பம் முதலே நேர்த்தியான முறையில் சர்வீஸ்கள் செய்த ஃபெடரர் 6-1 என்ற கணக்கில் எளிதாக இரண்வாது செட்டைக் கைப்பற்றினார். இதன் மூலம் 7-6, 6-1 என்ற செட்களில் சாம்பியன் பட்டம் வென்றார் பெடரர்.
கோப்பையுடன் உற்சாக போஸ் கொடுக்கும் ஃபெடரர் இந்த வெற்றியின் மூலம் ஏ.டி.பி டென்னிஸ் தொடரில் 102 பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார் ரோஜர் ஃபெடரர். அதிக ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ள டென்னிஸ் ஜாம்பவான் ஜிம்மி கார்னர்ஸின் சாதனையை முறியடிக்க ஃபெடரருக்கு எட்டு வெற்றிகளே தேவை. இந்த வெற்றியின் மூலம், ரோஜர் பெடரர் வரும் ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் நம்பிக்கையுடன் களமிறங்கவுள்ளார். புல்தரை கிராண்டஸ்லாம் போட்டியான விம்பிள்டனில் ஃபெடரர் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.