உலகின் முன்னணி டென்னிஸ் வீரராக வளம் வருபவர் 38 வயதான சுவிஸ் நாட்டின் ரோஜர் ஃபெடரர். இவர் இது வரை 20 முறை டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களைப் பெற்று, உலகின் அதிக முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களைப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார்.
இவரின் சாதனைகளை கௌரவிக்கும் விதத்தில் அந்நாட்டு அரசு ஃபெடரரின் பெயரில் நாணயம் ஒன்றை வெளியிட்டு, அதனை புழக்கத்திலும் விட்டுள்ளது. மேலும் உயிருடன் இருக்கும் பிரபலங்களில் தன்னுடைய நாணயத்தைப் பார்க்கும் முதல் நபராகவும் ஃபெடரர் சாதனைப் படைத்துள்ளார்.