தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரிலிருந்து ஃபெடரர் விலகல்! - ரோஜர் ஃபெடரர் காயம்

அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் பாரிசில் நடைபெறவுள்ள பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரிலிருந்து சுவிஸ் நாட்டின் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் விலகியுள்ளார்.

Federer to miss French Open due to knee surgery
Federer to miss French Open due to knee surgery

By

Published : Feb 20, 2020, 8:09 PM IST

டென்னிஸ் போட்டிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தலைசிறந்த வீரராக சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் திகழ்கிறார். இதுவரை ஆடவர் ஒற்றையர் பிரிவில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற 38 வயதானஃபெடரர், கடந்த மாதம் ஆஸ்திரேலியா ஓபன் தொடரின்போது காயத்தால் அவதிப்பட்டார்.

இந்நிலையில், தனது வலது காலில் ஏற்பட்ட காயத்திற்கு அவர் இன்று சிகிச்சை மேற்கொண்டார். இதன் விளைவாக ஃபெடரர் அடுத்து நடைபெறவுள்ள இந்தியன் வெல்ஸ், பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

ஃபெடரர்

"எனது வலது காலில் நீண்ட நாள்களாகக் காயம் இருந்துவந்தது. அந்தக் காயத்தை குணப்படுத்த இன்று சிகிச்சை மேற்கொண்டேன். மருத்துவரின் அறிவுரையால் அடுத்து நடைபெறவுள்ள பல தொடர்களிலிருந்து விலகியுள்ளேன். இருப்பினும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள விம்பிள்டன் தொடரில் கம்பேக் தருவேன்" என ரோஜர் ஃபெடரர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க:ரோஜர் ஒயின் போன்றவர்... இனிதான் ஆட்டம் இருக்கு

ABOUT THE AUTHOR

...view details