கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான யு. எஸ். ஓபன் தொடர் நியூயார்க்கில் நடைபெற்றுவருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்றுக்கான போட்டியில் சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர், பிரிட்டனின் டேனியல் இவான்சை எதிர்கொண்டார்.
#USOPEN: தொடர்ந்து 18ஆவது முறையாக நான்காவது சுற்றில் கால்பதித்த ஃபெடரர்! - US OPen 2019 Roger Federer
யு. எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் நான்கவாது சுற்றுக்கு சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் முன்னேறியுள்ளார்.
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய ஃபெடரர் 6-2, 6-2, 6-1 என்ற நேர்செட் கணக்கில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம், தொடர்ந்து 18ஆவது முறையாக அவர் இந்தத் தொடரில் நான்காவது சுற்றுக்குள் நுழைந்து அசத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறும் நான்காவது சுற்றுப் போட்டியில் அவர், பெல்ஜியம் வீரர் டேவிட் ஃகோவினை சந்திக்கவுள்ளார்.
அதேபோல், மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-2 என்ற நேர்செட் கணக்கில் செக் குடியரசை சேர்ந்த கரோலினா முச்சோவாவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.