தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வானவில் தேசத்தில் சாதனைப் படைத்த டென்னிஸின் தல - தளபதி ஆட்டம்! - ஃபெடரர் அறக்கட்டளை

கேப்டவுன்: டென்னிஸ் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரரின் அறக்கட்டளைக்காக நிதி திரட்ட நடத்தப்பட்ட நடால் - ஃபெடரரின்  ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்களின் எண்ணிகை புதிய சாதனையை எட்டியுள்ளது.

federer-nadal-match-breaks-record-of-highest-attendance-in-a-tennis-match
federer-nadal-match-breaks-record-of-highest-attendance-in-a-tennis-match

By

Published : Feb 8, 2020, 4:48 PM IST

தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் குழந்தைகளின் படிப்பிற்காக ரோஜர் ஃபெடரர் அறக்கட்டளை சார்பாக நிதி திரட்ட டென்னிஸ் போட்டி நடத்தப்பட்டது. அந்த ஆட்டத்தில் டென்னிஸின் தல - தளபதி என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரோஜர் ஃபெடரர் - ரஃபேல் நடால் ஆகியோர் ஆடினர். அந்தப் போட்டியில் 6-4, 3-6, 6-3 என ரோஜர் ஃபெடரர் வெற்றிபெற்றார்.

தென் ஆப்பிரிக்க ரசிகர்களுக்காக நடத்தப்பட்ட இந்தப் போட்டியின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடினர். ஒவ்வொரு ராலியின் முடிவிலும் நடால், ஃபெடரரின் புன்னகைகள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன. இந்தப் போட்டியைப் பார்க்க 51,954 பேர் வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்களின் கூட்டம்

இதனால் ஒரு போட்டியைப் பார்க்க அதிக ரசிகர்கள் வந்த போட்டி என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக ஃபெடரர் - ஸ்வெரவ் ஆடிய ஆட்டத்தைப் பார்க்க 42,517 பேர் வந்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தற்போது ஃபெடரர் - நடால் இணை ஆடிய போட்டி முறியடித்துள்ளது.

வானவில் தேசத்தில் சாதனைப் படைத்த டென்னிஸின் தல - தளபதி ஆட்டம்

இந்தப் போட்டியைப் பார்க்க வானவில் தேசத்து ரக்பி அணியின் கேப்டன் சியா கொலிசி வந்தார். அவர் ஸ்விஸ் நட்சத்திர வீரர் ஃபெடரருக்கு தென் ஆப்பிரிக்க அணியின் ரக்பி ஜெர்சியை பரிசளித்தார். உடனடியாக ரசிகரக்ள் முன் அந்த ஜெர்சியை ரோஜர் ஃபெடரர் அணிந்தது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ரோஜர் ஒயின் போன்றவர்... இனிதான் ஆட்டம் இருக்கு

ABOUT THE AUTHOR

...view details