SwissIndoorsBasel: ஸ்விஸ் இண்டோர் பேசல் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டத்தில் சுவிச்சர்லாந்தைச் சேர்ந்த முன்னணி நட்சத்திர வீரரான ரோஜர்ஃபெடரர், சக நாட்டு வீரரான ஸ்டேன் வாவ்ரிங்காவுடன் மோதவிருந்தார்.
ஆனால் இந்தப் போட்டியில் வாவ்ரிங்கா தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் போட்டியிலிருந்து விலகிக்கொண்டார். இதன் மூலம் ரோஜர் ஃபெடரர் ஸ்விஸ் இண்டோர் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிச்சுற்றில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.