தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஃபெட் கோப்பை: 2-1 என்ற கணக்கில் கொரியாவை வீழ்த்திய இந்தியா - சானியா மிர்சா

ஃபெட் கோப்பைக்கான டென்னிஸ் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் கொரியாவை இந்திய அணி வீழ்த்தியது.

fed-cup-india-beat-korea-2-1-climb-to-second-spot-in-league-standings
fed-cup-india-beat-korea-2-1-climb-to-second-spot-in-league-standings

By

Published : Mar 6, 2020, 2:48 PM IST

எட்டு நாடுகளுக்கிடையே நடக்கும் மகளிருக்கான ஃபெட் கோப்பை டென்னிஸ் தொடர் நடந்துவருகிறது. இதன் நேற்றையப் போட்டியில் இந்திய அணி கொரியாவை எதிர்கொண்டது.

இதன் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் ரிதுஜா போஸ்லேவும், கொரியாவின் நா-லே ஹானும் வெற்றிபெற்று தலா ஒரு புள்ளிகளுடன் இருந்தனர். இதையடுத்து வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியாவின் சானியா மிர்சா - அன்கித் ரெய்னா இணை களமிறங்கியது.

இந்திய இணையை எதிர்த்து கொரியாவின் னா-லே ஹான் - நான் ரி கிம் இணை ஆடியது. இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய இந்திய இணை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றிபெற்றது.

இந்திய அணி

இதனால் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கொரியாவை வீழ்த்தியதோடு, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கும் முன்னேறியது.

இதையும் படிங்க:4 மாதத்தில் 26 கிலோ எடையைக் குறைத்தது எப்படி? வைரலாகும் சானியா மிர்சாவின் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details