தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

நடாலிடம் அனுமதிச்சீட்டு கேட்ட காவலாளி! - நடால்

ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் காலிறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காகப் பயிற்சி முடிந்து மைதானத்திற்குள் நுழைகையில் நடாலிடம் காவலாளி அனுமதிச்சீட்டு கேட்ட காணொலி ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.

even-the-world-no-dot-1-tennis-player-needs-accreditation-viral-video-in-social-media
even-the-world-no-dot-1-tennis-player-needs-accreditation-viral-video-in-social-media

By

Published : Jan 29, 2020, 7:36 PM IST

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால். இவர் ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் காலிறுதிப் போட்டியில் டாமினிக் தீமை எதிர்த்து இன்று ஆடவிருந்தார். இதற்காகப் பயிற்சி முடித்து மைதானத்திற்கு உள்ளே வரும்போது, நடாலை தடுத்து நிறுத்திய காவலாளி மைதானத்திற்குள் நுழைவதற்கான அனுமதிச்சீட்டை கேட்டார்.

இதனைக்கேட்டு வியப்படைந்து நடால் சிரிக்க, அருகில் நின்ற காவலாளி நடால் குறித்து பேசி அனுமதிக்குமாறு கூறினார். இதையடுத்து தடுத்து நிறுத்திய காவலாளியை தட்டிக்கொடுத்து மைதானத்திற்குள் புகுந்தார். இந்தக் காணொலி ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க:ஆஸ்திரேலியன் ஓபன்: 36 வருடங்களுக்குப் பிறகு அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஆஸ்திரேலிய வீராங்கனை!

ABOUT THE AUTHOR

...view details