ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற ஆடவருக்கான நான்காம் சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், பிரஞ்சின் கில் மான்ஃபில்ஸை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான ஆட்டத்தில் தொடக்கம் முதலே தனது திறமையை வெளிப்படுத்திய டொமினிக் தீம், 6-2, 6-4, 6-4 என்ற செட் கணக்குகளில் மான்ஃபில்ஸை வீழ்த்தி, இத்தொடரின் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இதனையடுத்து இன்று மகளிர் பிரிவில் நடைபெற்ற நான்காம் சுற்று ஆட்டத்தில் எஸ்டோனியாவின் அன்னெட் கொன்டாவிட், போலாந்தின் இகா ஷ்வாதேக்கை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் செட்டை ஷ்வாதேக் 7-6 என்ற கணக்கில் கைப்பற்றி கொன்டாவிட்டிற்கு அதிர்ச்சியளித்தார்.
இதனையடுத்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கொன்டாவிட் அடுத்தடுத்த செட்களை 7-5, 7-5 என்ற அடிப்படையில் கைப்பற்றி வெற்றி பெற்றார். இதன் மூலம் அன்னெட் கொன்டாவிட் ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க:காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய ரோஜர் ஃபெடரர்!