தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஏடிபி ஃபைனல்ஸ்: டாமினிக் தீமிடம் வீழ்ந்த நடால்...!

ஏடிபி ஃபைன்ல்ஸ் தொடரில் குரூப் சுற்றுப்போட்டியில் டாமினிக் தீமிடம் 7-6 (7), 7-6(4) என்ற செட் கணக்கில் நட்சத்திர வீரர் நடால் தோல்வியடைந்துள்ளார்.

dominic-thiem-defeats-rafael-nadal-at-atp-finals
dominic-thiem-defeats-rafael-nadal-at-atp-finals

By

Published : Nov 18, 2020, 7:05 PM IST

உலகின் டாப் 8 வீரர்கள் போட்டியிடும் ஏடிபி ஃபைனல்ஸ் தொடர் நடந்து வருகிறது. 8 வீரர்களும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குரூப் சுற்றுப் போட்டிகளில் பெறும் வெற்றிகளின் அடிப்படையில் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறுவர்.

நேற்று நடந்த குரூப் பிரிவு போட்டியில் நட்சத்திர வீரர் நடால் - டாமினிக் தீம் ஆகியோர் ஆடினார். இதன் முதல் செட் ஆட்டத்தில் இரு வீரர்களும் தங்களது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தினர். அதிலும் நடாலின் இரண்டு செட் பாய்ண்ட்டுகளை முறியடித்து டாமினிக் தீம் அபாரமாக ஆடினார். இதனால் ஆட்டம் டை ப்ரேக்கருக்கு சென்றது. அதில் 7-9 என டாமினிக் தீம் முதல் செட்டைக் கைப்பற்றினார். முதல் செட் ஆட்டம் 72 நிமிடங்கள் வரை நீடித்தது.

பின்னர் நடந்த இரண்டாவது செட் ஆட்டத்திலும் இரு வீரர்களும் சளைக்காமல் போராட, மீண்டும் டை ப்ரேக்கருக்கு சென்றது. அதில்ம் மீண்டும் டாமினிக் தீம் 7-4 என வெற்றிபெற்று இரண்டாவது செட்டைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதால், அரையிறுதிக்கான வாய்ப்பை தீம் பிரகாசப்படுத்தியுள்ளார்.

டாமினிக் தீமிடம் வீழ்ந்த நடால்

இந்த வெற்றி குறித்து தீம் கூறுகையில், '' இந்த ஆட்டத்தின் ஒவ்வொரு தருணத்திலும் கடினமான ஸ்ட்ரோக்களை ஆட வேண்டியிருந்தது. நான் செர்வ் செய்தவிதம் எனக்கு திருப்தியாக உள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு முறை தான் செர்வ் செய்யும்போதும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். அதேபோல் நான் செர்வ் செய்யும் போது அதிக முறை அந்த செட்டை கைப்பற்றியுள்ளேன். டை ப்ரேக்கரின் போது செர்வ்கள் தான் எனக்கு அதிகமாக உதவியது'' என்றார்.

இதேபோல் நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் அலெக்ஸாண்டர் ஸ்வரெவை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் டேனில் மெத்வதேவ் வீழ்த்தினார். ஏற்கனவே இந்த இருவரும் ரோலக்ஸ் பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆடினர். அதிலும் மெத்வதேவ் தான் வெற்றிபெற்றிருந்தார்.

இதையும் படிங்க:ஓய்வுபெற்ற மாஸ்செரானோவுக்கு மெஸ்ஸி, நெய்மர், ஸாவி பாராட்டு...!

ABOUT THE AUTHOR

...view details