டென்னிஸ் விளையாட்டின் பிரபலமான தொடரான யூ.எஸ்.ஓபன் தொடர் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று ஆட்டத்தில், உலகின் இரண்டாம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டோமினிக் தீம், குரோஷியாவின் மரின் சிலிச்சை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியா டோமினிக் தீம் முதல் இரண்டு செட்களையும், 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி சிலிச்சிற்கு அதிர்ச்சியளித்தார். அதன் பின்னர் நடைபெற்ற மூன்றாவது செட்டிற்கான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய மரின் சிலிச் அந்த செட்டையும் 3-2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.