தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

யு.எஸ் ஓப்பன் தொடரிலிருந்து வெளியேறிய ஜோகோவிச் - Djokovic v Wawrinka

யு.எஸ் ஓப்பன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்காவுக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக செர்பிய வீரர் ஜோகோவிச் வெளியேறியுள்ளார்.

Djokovic

By

Published : Sep 2, 2019, 11:16 PM IST

2019ஆம் ஆண்டுக்கான யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காவதுச் சுற்றில் முதல் நிலை வீரரும் செர்பி வீரருமான ஜோகோவிச், சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவுடன் மோதினார்.இதில், சிறப்பாக விளையாடிய வாவ்ரிங்கா 6-4, 7-5 என்ற கணக்கில் முதலிரண்டு செட்களையும் கைப்பற்றினார்.

ஜோகோவிச்

இதைத்தொடர்ந்து, நடைபெற்ற மூன்றாவது செட்டில் ஆதிக்கம் செலுத்தி அவர் 2-1 என்ற கணக்கில் புள்ளிகளைப் பெற்றார். அதுவரை தனது இடது தோள்பட்டையில் காயத்துடன் விளையாடி வந்த ஜோகோவிச், ஆட்டத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதனால், வாவ்ரிங்கா 6-4, 7-5, 2-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். முன்னதாக, 2016 யு.எஸ் ஓப்பன் தொடரின் இறுதிப் போட்டியில் வாவ்ரிங்கா, ஜோஜோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details