ஆறாவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்! - wimbeldon
22:06 July 11
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று (ஜூலை 11) நடைபெற்றது. இப்போட்டியில், இத்தாலி நாட்டின் மேட்டியோ பெரெட்டினியை 6-7 (4), 6-4, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இது ஜோகோவிச் வெல்லும் ஆறாவது விம்பிளடன் பட்டம்.
இதன்மூலம், அவர் மொத்தம் இருபது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். ஆஸ்திரேலியா, பிரெஞ்சு கிராண்ட்ஸ்லாம் என தொடர்ந்து வென்றிருந்த ஜோகோவிச்சுக்கு, இது இந்த வருடத்தின் 'ஹாட்ரிக்' கிராண்ட்ஸ்லாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து நடைபெற இருக்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரையும் ஜோகோவிச் வெல்லும் பட்சத்தில், சமீப காலங்களில் ஆண்டின் அத்தனை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றவர் என்ற பெருமையை பெறுவார் என்பது கூடுதல் தகவல்.