தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அமெரிக்க ஓபன் - அரையிறுதிக்கு முன்னேறிய ஜோகோவிக்

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல் நிலை வீரர் நோவாக் ஜோகோவிக் அரையிறுதிக்கு முன்னேறினார்.

Novak Djokovic
Novak Djokovic

By

Published : Sep 9, 2021, 4:55 PM IST

நடப்பாண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதிப் போட்டி ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிக், ஆறாம் நிலை வீரரான இத்தாலியின் மடோயோ பிரெடினியை எதிர்கொண்டார்.

முன்னணி வீரர்கள் இருவர் மோதிக்கொண்ட இப்போட்டி ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அரையிறுதிக்கு முன்னேறிய ஜோகோவிக்

ஆட்டத்தின் முதல் செட்டை பிரெடினி 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி ஜோகோவிக்கிற்கு அதிர்ச்சி அளித்தார். பின்னர், சுதாரித்துக்கொண்ட ஜோகோவிக், இரண்டு, மூன்றாம் செட்களை 6-2, 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இறுதியாக நான்காம் செட்டையும் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார் ஜோகோவிக். இதையடுத்து 5-7,6-2,6-2,6-3 என்ற செட் கணக்கில் நோவாக் ஜோகோவிக் அரையிறுதிக்கு முன்னேறினார்.

வரலாற்று சாதனையை நோக்கி ஜோகோவிக்

அமெரிக்க ஓபன் பட்டத்தை வெல்லும்பட்சத்தில் ஆண்கள் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். இதுவரை மொத்தம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை ரோஜர் பெடரர், ரபேல் நடால், ஜோகோவிக் ஆகியோர் வென்று சமனில் உள்ளார்.

அத்துடன் இந்த அமெரிக்க ஓபன் பட்டத்தை ஜோகோவிக் வெல்லும் பட்சத்தில், ஆஸ்திரேலியன் ஓபன், பிரென்ச் ஓபன், விம்பிளிடன், அமெரிக்கன் ஓபன் ஆகிய நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், 1969ஆம் ஆண்டுக்குப்பின் ஒரே ஆண்டில் வென்ற வீரர் என்ற சாதனையை பெறவுள்ளார்.

இதையும் படிங்க:வாத்தி ரிட்டர்ன்ஸ்: தோனியை கொண்டாடி தீர்த்த நெட்டிசன்ஸ்

ABOUT THE AUTHOR

...view details