கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான யுஎஸ் ஓபன் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காம் சுற்றுக்கான போட்டியில் உலகின் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிக், ஸ்விச்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ஸ்டான் வௌரிங்காவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் வௌரிங்கா 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ஜோகோவிக்கை வீழ்த்தி அதிர்ச்சியளித்தார்.
அதன் பின் தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய ஜோகோவிக் ஆரம்பத்தில் அதிரடியாக தொடங்கினாலும் இறுதியில் வௌரிங்காவின் அசாத்திய ஆட்டத்தால் 7-5 என்ற புள்ளிக்கணக்கில் இரண்டாவது செட்டையும் இழந்தார்.
அதன் பின் இறுதியில் முன்றாவது செட்டையும் 2-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலையில் இருக்கும் போது ரிட்டைர்ட் முறையில் ஜோகோவிக் ஆட்டத்திலிருந்து விலகினார்.
இதன் முலம் ஸ்டான் வௌரிங்கா 6-4, 7-5, 2-1 என்ற புள்ளிக்கணக்கில் உலகின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிக்கை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார்.