உலகின் முன்னணி டென்னிஸ் வீரராகத் திகழ்பவர் நோவாக் ஜோகோவிச். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஆட்ரியா தொடரின்போது ஜோகோவிச் உட்பட, சில டென்னிஸ் வீரர்கள் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
கரோனாவிலிருந்து மீண்டு பயிற்சிக்குத் திரும்பிய ஜோகோவிச்! - சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு
கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவந்த நட்சத்திர டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச், மீண்டும் பயிற்சிக்குத் திரும்பியுள்ளார்.
இதையடுத்து மருத்துவமனை சிகிச்சை முடிந்த ஜோகோவிச், பூரண குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது இவர் மீண்டும் தனது பயிற்சிக்குத் திரும்பியுள்ளதாக ஜோகோவிச்சின் தலைமைப் பயிற்சியாளர் போரிஸ் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து போரிஸ் வெளியிட்டுள்ள பதிவில், "கரோனாவிலிருந்து மீண்ட ஜோகோவிச், தற்போது மீண்டும் பயிற்சிக்குத் திரும்பியுள்ளார். அவர் கூடிய விரைவில் சர்வதேச டென்னிஸுக்கு திரும்புவதை எதிர்நோக்கி காத்திருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ள அவர், ஜோகோவிச் பயிற்சி பெறும் புகைப்படத்தையும் இணைந்துள்ளார்.