அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டி நகரில் நடைபெற்றுவரும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதிப்போட்டியில், உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவாக் ஜோகோவிச், ஃபிரான்ஸ் வீரர் லூக்கா புயிலை எதிர்கொண்டார்.
இருவரும் முன்னதாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மோதியபோது ஜோகோவிச், லூக்கா புயிலை வீழ்த்தியிருந்தார். எனவே இன்றைய போட்டியில் லூக்கா அதற்கு பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று தொடங்கிய போட்டியில் ஜோகோவிச்சிற்கு இணையாக ஃபிரான்ஸ் வீரர் லூக்காவும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் முதல் செட் டை-பிரேக்கர் வரை சென்றது. ஆனால் ஜோகோவிச் 7-6 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.