கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோக்கோவிக், 22ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் ராபர்டோ பாட்டிஸ்டா ஆகியோர் மோதினர்.
டென்னிஸ்: விம்பிள்டன் பைனலில் ஜோக்கோவிக்! - Djokovic enters into the wimbledon finals
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றுப் போட்டிக்கு செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிக் தகுதி பெற்றுள்ளார்.
இந்த போட்டியில் முதல் செட்டை ஜோக்கோவிக் 6-2 என எளிதாக கைப்பற்றினார். அதைத் தொடர்ந்து இரண்டாவது செட்டில் சிறப்பாக செயல்பட்ட பாட்டிஸ்டாவிடம் 4-6 என வீழ்ந்த ஜோக்கோவிக், அதற்கடுத்த இரண்டு செட்களையும் 6-3, 6-2 எனக் கைப்பற்றி அசத்தினார். இப்போட்டி இரண்டு மணிநேரம் 48 நிமிடங்கள் நீடித்தது.
நடப்பு சாம்யினான ஜோக்கோவிக், பாட்டிஸ்டாவை வீழ்த்தி விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இதன்மூலம் 25ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் இறுதிப்போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். இதுவரை ஜோக்கோவிக் நான்கு முறை(2011,2014,2015,2018) விம்பிள்டன் டென்னிஸ் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.