தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கரோனா வைரஸ்: ஒரு மில்லியன் யூரோக்களை நன்கொடையாக வழங்கிய ஜோகோவிச்! - ஒரு மில்லியன் யூரோக்களை வழங்கிய நோவாக் ஜோகோவிச்!

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக செர்பியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் அந்நாட்டுக்கு ஒரு மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளார்.

Djokovic donates 1 million to Serbia in COVID-19 fight
Djokovic donates 1 million to Serbia in COVID-19 fight

By

Published : Mar 27, 2020, 9:43 PM IST

சீனாவில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கோவிட் -19 வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இதுவரை இந்த வைரஸால் உலகளவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நாட்டிலும் மருத்துவர்கள் தீவிரமாக உழைக்கின்றனர்.

அதேசமயம், இந்த கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக பல்வேறு தரப்பினர் நன்கொடை வழங்கிவருகின்றனர். அந்தவகையில், செர்பியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரும் உலகின் முதல் நிலை வீரருமான நோவாக் ஜோகோவிச், அந்நாட்டிற்கு ஒரு மில்லியன் யூரோக்களை ( இந்திய மதிப்பில் ரூ. 8 கோடி 28 லட்சம்) நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்த இக்கட்டான நிலையில் அயாரது உழைக்கும் அனைத்து மருத்துவக் குழுக்களுக்கு நான் எனது நன்றி. இந்த பணம் உயிர் காக்கும் சுவாசக் கருவிகள், பிற சுகாதார உபகரணங்கள் ஆகியவற்றை வாங்க உதவும் என தெரிவித்துள்ளார். முன்னதாக, கரோனா வைரஸால் சுவிட்சர்லாந்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அந்நாட்டு நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் ஒரு மில்லியன் பிரான்க் நன்கொடையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ரூ. 50 லட்சம் நிவாரண நிதி வழங்கிய சச்சின்!

ABOUT THE AUTHOR

...view details