தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'மாட்ரிட் சாம்பியன்' பட்டத்தை 3வது முறையாக வென்ற ஜோக்கோவிச்! - ஜோக்கோவிச்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் சுற்றுப்போட்டியில் செர்பிய நட்சத்திர வீரர் நோவாக் ஜோக்கோவிச் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

djokovic

By

Published : May 13, 2019, 3:24 PM IST

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் கடந்த மூன்றாம் தேதி முதல் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோக்கோவிச், கிரீஸ் நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் ஸ்டெபானோஸ் சிட்சிஸிபாசை எதிர்கொண்டார்.

மாட்ரிட் சாம்பியன் பட்டத்தை முத்தமிடும் ஜோக்கோவிச்

இப்போட்டியில் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஜோக்கோவிச், 6-3, 6-4 நேர்செட்களில் எளிதாக வென்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் மூன்றாவது முறையாக மாட்ரிட் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஸிப் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். மேலும், ஜோக்கோவிச் 33 ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 பட்டங்கள் கைப்பற்றி, ஸ்பெயின் நட்சத்திர வீரர் நடாலின் சாதனையை சமன் செய்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details