தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வியன்னா ஓபன்: மூன்றாம் சுற்றில் ஜோகோவிச்! - போர்னா கோரிக்

ஆஸ்திரியாவில் நடைபெற்றுவரும் வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் வெற்றிபெற்று அசத்தியுள்ளனர்.

Djokovic beats Coric for spot in Vienna quarters
Djokovic beats Coric for spot in Vienna quarters

By

Published : Oct 29, 2020, 4:55 PM IST

டென்னிஸ் விளையாட்டின் மிகப் பிரபலமான உள்ளரங்குத் தொடரான வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடைபெற்றுவருகிறது.

இத்தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், குரோசியாவின் போர்னா கோரிக்-கை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இப்போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்த ஜோகோவிச், முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் கைப்பற்றி போர்னாவிற்கு அதிர்ச்சியளித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய ஜோகோவிச், 6-3 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றி அசத்தினார்.

ஜோகோவிச் - போர்னா கோரிக்

இதன் மூலம் வியன்னா ஓபன் இரண்டாது சுற்று ஆட்டத்தில் நோவாக் ஜோகோவிச் 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் போர்னா கோரிக்-கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதையும் படிங்க:அஸ்தானா ஓபன்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய திவிஜ் ஷரண் இணை!

ABOUT THE AUTHOR

...view details