தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆஸ்திரேலிய ஓபன்: நான்காம் சுற்றுக்கு முன்னேறி அசத்திய ஜோகோவிச்! - நான்காம் சுற்றுக்கு முன்னேறி அசத்திய ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காம் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.

Djokovic advance to 4th round of Australian Open
Djokovic advance to 4th round of Australian Open

By

Published : Jan 25, 2020, 12:26 PM IST

மெல்போர்னில் இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும் செர்பியாவின் நட்சத்திர வீரருமான நோவாக் ஜோகோவிச், ஜப்பானின் யோஷிஹிடோ நிஷியோகாவை(Yoshihito Nishioka) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற செட்கணக்குகளில் நிஷியோகாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் நான்கம் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

நோவாக் ஜோகோவிச் - யோஷிஹிடோ நிஷியோகா

இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள நான்காம் சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், அர்ஜெண்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன்னை(Diego Schwartzman)எதிர்கொள்கிறார்.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: மூன்றாவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வியடைந்த சிட்சிபாஸ்!

ABOUT THE AUTHOR

...view details