சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் அஸ்தானா ஓபன் 2020 டென்னிஸ் தொடர் கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று (அக்.28) நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு நான்காம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் திவிஜ் ஷரண் - லூக் பாம்ப்ரிட்ஜ் இணை, உக்ரைனின் ஏரியல் பெஹர்-கோன்சலோ எஸ்கோபார் இணையுடன் மோதியது.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை ஷரண் இணை 7-5 என்ற கணகில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தில் பெஹர் இணை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.