முன்னாள் உலக ’நம்பர் ஒன்’ டென்னிஸ் வீராங்கனையான டெமார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி அடுத்த மாதம் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியுடன் டென்னிஸிலிருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.
தற்போது 29 வயதான கரோலின் வோஸ்னியாக்கி, இதுவரை 30 பட்டங்களை கைப்பற்றியுள்ளார். இதில், 2018ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனையும் அவர் வென்றுள்ளார். ஆனால், இவர் ஒரு முறைகூட கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வெற்றி பெற்றதில்லை.
இந்நிலையில் ஓய்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என்று உணர்ந்ததால் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். என்னுடைய கணவர் டேவிட் லீ உடன் இணைந்து இல்வாழ்க்கையில் கவனம் செலுத்தப்போகிறேன். என் ரசிகர்கள், நண்பர்கள், ஸ்பான்சர்கள் என்னுடைய அப்பா, கணவர், கோச் ஆகியோருக்கும் என் மனதார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் இது எதுவும் சாத்தியமில்லை” என பதிவிட்டுள்ளார்.
அடிக்கடி காயத்தால் அவதிப்படும் வோஸ்னியாக்கி இந்த ஆண்டில் அதிக போட்டிகளில் பங்கேற்கவில்லை. தரவரிசையில் ஆண்டின் தொடக்கத்தில் 3ஆவது இடத்தில் இருந்த வோஸ்னியாக்கி தற்போது ஆயிரத்து 383 புள்ளிகளுடன், 37ஆவது இடத்திற்கு இறங்கியுள்ளார்.
இதையும் படிங்க...ஃபெடரரால் டென்னிஸில் ஏற்பட்ட அதிசயம்!