தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஜோகோவிச்சை சமாளிப்பாரா டெனிஸ் ஷபலோவ்? - ஆர்வம் காட்டும் ரசிகர்கள்!

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றுப் போட்டியில் கனடா வீரர் டெனிஸ் ஷபலோவ், செர்பியாவின் நட்சத்திர வீரர் ஜோகோவிச்சை எதிர்கொள்ளவுள்ளார்.

Shapovalo

By

Published : Oct 7, 2019, 6:39 PM IST

சீனாவின் ஷாங்காய் நகரில், இந்த ஆண்டுக்கான ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கனடா வீரர் டெனிஸ் ஷபலோவ் (Denis Shapovalov), அமெரிக்காவின் ஃபிரான்சிஸ் டியாஃபோவுடன் (Frances Tiafoe) மோதினார்.

டெனிஸ் ஷபலோவ்

இதில், சிறப்பாக விளையாடிய டெனிஸ் ஷபலோவ் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் நடைபெறவுள்ள இரண்டாம் சுற்றுப் போட்டியில், அவர் உலகின் முதல் நிலை வீரரும் செர்பியாவைச் சேர்ந்தவருமான ஜோகோவிச்சை எதிர்கொள்ளவுள்ளார்.

முன்னதாக ஜோகோவிச்சை எதிர்த்து இரண்டுமுறை விளையாடிய போதும் டெனிஸ் ஷபலோவ் தோல்வியுற்றார். இதனால், ஜோகோவின் ஆட்டத்தை சமாளித்து இம்முறை டெனிஸ் ஷபலோவ் வெற்றிகாண்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க:சாம்பியன் பட்டத்துடன் டென்னிஸில் கம்பேக் தந்த ஜோகோவிக்!

ABOUT THE AUTHOR

...view details