இந்த ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யு.எஸ். ஓபன் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு நான்காம் சுற்றுப் போட்டியில் நடப்பு சாம்பியனும் ஜப்பான் வீராங்கனையுமான நவோமி ஒசாகா, சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக்கை எதிர்கொண்டார்.
நடப்பு சாம்பியன் ஒசாகாவை அப்செட் செய்த பெலின்டா! - யு.எஸ் ஓபன்
யு.எஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சுவிஸ் வீராங்கனை பெலின்டா பென்சிக் நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகாவை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
Naomi Osaka
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை பெலின்டா 7-5 என்ற கணக்கில் வென்றார். இதைத்தொடர்ந்து, இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர், 6-4 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். இதன்மூலம், 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.