வரும் ஜனவரி மாதம் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் முக்கிய ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் தொடங்கவுள்ளது. இதற்காக பிரபல டென்னிஸ் வீரர்களான ரஃபேல் நடால், ரோஜர் ஃபெடரர், நோவக் ஜோகாவிச் ஆகியோர் தயாராகிவருகின்றனர். இவர்களுக்கு சவாலளிக்கும் விதமாக இளம் வீரர்களான சிட்சிபாஸ், டேனில் மெத்வதேவ் ஆகியோரும் தயாராகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் தொடர் குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாட் உட்பிரிட்ஜ் பேசியுள்ளார். அதில், 23 வயதாகும் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் மூன்று ஜாம்பவான்களான நடால், ஃபெடரர், ஜோகோவிச் ஆகியோரை வீழ்த்தி, நிச்சயம் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கிறேன்.