கரோனா வைரசால் வருவாய் பாதிக்கப்பட்டு தரவரிசையில் 501 முதல் 700 இடங்களில் உள்ள வீரர்களுக்கும், இரட்டையர் பிரிவில் 176 முதல் 300 இடங்கள்வரை இடம் பிடித்துள்ள வீரர்களுக்கும் உதவும் வகையில் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் 3 லட்சத்து 50 ஆயிரம் டாலர்கள் ஒதுக்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட வீரர்களுக்காக களமிறங்கிய ஐடிஎஃப் - கரோனா வைரஸ் பாதிப்பு
தரவரிசைப் பட்டியலில் கீழே உள்ள வீரர்களுக்கு உதவுவதற்காக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் சார்பாக 3 லட்சத்து 50 ஆயிரம் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் ஒற்றையர் பிரிவில் 501 முதல் 700 வரை இடம்பிடித்துள்ள வீரர்களுக்கு ஆயிரம் டாலர்களும், இரட்டையர் பிரிவில் 176 முதல் 30 இடங்கள்வரை இடம்பிடித்துள்ள வீரர்களுக்கு 750 டாலர்களும் வழங்கப்படவுள்ளன.
இதுகுறித்து சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் தலைவர் டேவிட் பேசுகையில், '' கரோனா வைரஸ் பாதிப்பால் பலருக்கும் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐடிஎஃப் சார்பாக டென்னிஸின் அனைத்து பங்குதாரர்களுக்கும் உதவும் வகையில் திட்டமிட்டு வருகிறோம். எங்களிடம் வருவாய் ஈடுகட்டுவதற்கு பல வழிகள் இல்லையென்றாலும், பல்வேறு தரப்பினருக்கும் உதவி வருகிறோம். நிச்சயம் கரோனா வைரஸ் சூழல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு டென்னிஸ் விளையாட்டு மீண்டும் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடப்படும் என நம்புகிறேன்'' என்றார்.