கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜூலை 31ஆம் தேதி வரை ஏடிபி டென்னிஸ் தொடர் நடைபெறாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜூன் மாதத்திலேயே ஏட்ரியா கண்காட்சி டென்னிஸ் தொடர் நடக்கவுள்ளது.
கரோனாவுக்கு பின் மீண்டும் தொடங்கும் டென்னிஸ்: ஜோகோவிச் பங்கேற்பு - Corona Virus
ஜூலை 31ஆம் தேதி வரையில் ஏடிபி டென்னிஸ் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னதாக ஏட்ரியா கண்காட்சி டென்னிஸ் தொடர் நடக்கவுள்ளது.
COVID-19: Djokovic, Thiem to headline The Adria Tour
இந்த ஏட்ரியா டென்னிஸ் தொடரில் ஜோகோவிச், டாமினிக் தீம், டிமிட்ரோவ், சிலிக் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தத் தொடரின் முதலிரண்டு சுற்றுப் போட்டிகள் ஜூன் 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் செர்பியா, குரோஷியா உள்ளிட்ட நகரங்களில் நடக்கவுள்ளது.
நீண்ட நாள்களுக்கு பின் டென்னிஸ் தொடர் நடக்கவுள்ளதால், ரசிகர்கள் இந்தப் போட்டிகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.