உலகின் முன்னணி டென்னிஸ் வீரராக வலம் வருபவர் செர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிச். இவர், கரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள செர்பியா மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறார்.
இந்நிலையில், ஜோகோவிச் தொண்டு நிறுவனம் சார்பாக செர்பியாவின் க்ரூசெவாக் மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக ஐந்து வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இது குறித்து ஜோகோவிச்சின் ட்விட்டர் பதிவில், இன்று ஹென்கெல்லுடன் இணைந்து நோயாளிகளுக்கு தேவையான ஐந்து வென்டிலேட்டர்கள் மற்றும் ஐந்து மருத்துவக் கண்காணிப்பு சாதனங்களை க்ரூசெவாக்கிலுள்ள பொது மருத்துவமனைக்கு வழங்கியுள்ளோம். இப்பெருந்தொற்றை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.
ஜோகோவிச்சின் இச்செயலுக்கு பல்வேறு துறை பிரபலங்களும் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:'உங்களது சொந்த பாதுகாப்பில் பயிற்சியைத் தொடங்குங்கள்' - அதிர்ச்சியில் வீரர்கள்