டோக்கியோ (ஜப்பான்):டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுவரை, ஒலிம்பிக் போட்டிகளைச் சார்ந்தவர்களில் 58 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை கோகோ கஃப் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " எனக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால், டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க இயலாது என்பதை மிகவும் வருத்தத்துடன் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.