நடப்பு ஆண்டின் முதல் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் நாளை மறுநாள் மெல்போர்னில் தொடங்கவுள்ள நிலையில், மகளிருக்கான அடிலெய்ட் இன்டர்நேஷனல் ஓபன் தொடர் அடிலெய்ட் நகரில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் லகின் முதல் நிலை வீராங்கனையும் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீராங்கனையுமான ஆஷ்லி பார்ட்டி, உக்ரைனின் டயனா யஸ்டிரிம்ஸ்காவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
கடந்த இரண்டு முறையும் இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த ஆஷ்லி பார்dடி இம்முறை சாம்பியன் பட்டம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து, தனது சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய அவர் 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் டயனாவை வீழ்த்தி அடிலெய்ட் ஓபன் பட்டத்தை வென்றார். தனது சொந்த மண்ணில் அவர் வெல்லும் முதல் டபள்யூ.டி.ஏ. (WTA) பட்டம் இதுவாகும்.