தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆஸ்திரேலியன் ஓபன்: மூன்றாவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வியடைந்த சிட்சிபாஸ்! - சிட்சிபாஸ் தோல்வி

மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் கிரீக் நட்சத்திர வீரர் சிட்சிபாஸ் தோல்வியடைந்தார்.

Australian Open: Sixth Seed Stefanos Tsitsipas Knocked Out in 3rd Round by Milos Raonic
Australian Open: Sixth Seed Stefanos Tsitsipas Knocked Out in 3rd Round by Milos Raonic

By

Published : Jan 24, 2020, 5:56 PM IST

2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நட்சத்திர வீரர்கள் பலரும் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துவருகின்றனர். இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் கிரீக் வீரர் சிட்சிபாஸை எதிர்த்து கனடா நாட்டு வீரர் ரவுனிக் ஆடினார்.

நட்சத்திர வீரர் சிட்சிபாஸ் ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முக்கிய போட்டியாளராகக் கருதப்பட்டதால், இந்த போட்டி மீது ரசிகர்களிடையே அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டது. போட்டியின் முதல் செட் ஆட்டத்தில் இரு வீரர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்த 7-5 என்ற கணக்கில் ரவுனிக் கைப்பற்றினார். இதையடுத்து நடந்த இரண்டாவது செட்டையும் 6-4 என ரவுனிக் கைப்பற்ற, மூன்றாவது செட் பரபரப்பானது.

ரவுனிக்

அதில் இரு வீரர்களும் அடுத்த புள்ளிகளைப் பெற்று 6-6 என்ற நிலையில் இருக்க, ஆட்டம் டை ப்ரேக்கருக்கு சென்றது. டை ப்ரேக்கரிலும் 7-2 என ரவுனிக் வெற்றிபெற்று 7-6 என மூன்றாவது செட்டைக் கைப்பற்றினார். இந்த வெற்றியையடுத்து ரவுனிக் ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

நட்சத்திர வீரர் சிட்சிபாஸ் தோல்வியடைந்தது டென்னிஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற ரவுனிக் நான்காவது சுற்றில் குரோஷிய வீரர் சிலிக்கை எதிர்கொள்ளவுள்ளார்.

இதையும் படிங்க: மாஸ் காட்டிய ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர்... நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா

ABOUT THE AUTHOR

...view details