தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆஸ்திரேலியன் ஓபன்: அரையிறுதியில் வெளியேறிய நம்பர் ஒன் வீராங்கனை! - மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச்சுற்றி

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் சோஃபியா கெனின், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

Shofia kenin defeat world no 1 Ashley barty
Shofia kenin defeat world no 1 Ashley barty

By

Published : Jan 30, 2020, 11:18 AM IST

இந்தாண்டும் முதலாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச்சுற்றில் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, உலகின் 12ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் சோஃபியா கெனினை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிவந்த சோஃபியா, முதலாவது செட்டை 7-6 என்ற கணக்கில் கைப்பற்றி ஆஷ்லேவிற்கு அதிர்ச்சியளித்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சோஃபியா 7-5 என்ற கணக்கில் ஆஷ்லேவை வீழ்த்தினார். இதன்மூலம் அமெரிக்காவின் சோஃபியா கெனின் 7-6, 7-5 என்ற நேர் செட்கணக்குகளில் ஆஷ்லே பார்டியை வீழ்த்தி ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

இதன்மூலம் சோஃபியா கெனின் தனது முதல் சர்வதேச கிராண்ஸ்ட்லாம் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: ஆபாச வார்த்தை பேசிய சாம்பியனுக்கு அபராதம் விதிப்பு

ABOUT THE AUTHOR

...view details