தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆஸ்திரேலியன் ஓபன் : இரண்டாவது சுற்றில் நடால்!

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில், உலகின் முன்னணி வீரரான ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடால் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Australian Open: Rafael Nadal storms into second round
Australian Open: Rafael Nadal storms into second round

By

Published : Feb 9, 2021, 5:13 PM IST

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன், அந்நாட்டின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (பிப்.09) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், செர்பியாவின் லாஸ்லோ டெரேவை எதிர்கொண்டர்.

பரபரப்பாக நடந்த இப்போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த நடால் 6-3 என்ற கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினர். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டையும் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி டெரேவிற்கு அதிர்ச்சியளித்தார்.

இரண்டாம் சுற்றில் நடால்

பின்னர் ஆட்டத்தின் மூன்றாவது செட்டில் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால் 6-1 என்ற கணக்கில் அந்த செட்டையும் கைப்பற்றினார். இதன் மூலம் ரஃபேல் நடால் 6-3, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் லாஸ்லோ டெரேவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு ரஃபேல் நடால் முன்னேறினார்.

இதையும் படிங்க:கிரிக்கெட் ஒளிபரப்புக்கு ட்ரோன் உபயோகிக்க அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details